நீலகிரி : குன்னூரின் முக்கிய நீராதாரமான ரேலியா அணை முழுமையாக நிரம்பி தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வருவதால் தடுப்பணை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூர் நகரில் உள்ள 30 வார்டுகளின் முக்கிய குடிநீர் ஆதாரமான ரேலியா அணை அதன் முழு கொள்ளளவான 46.3 அடியை எட்டியதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளுக்கு குடி நீர் விநியோகம் செய்யும் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது.
10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகித்து வந்த நிலையில், அணைப் பகுதியில் பரவலான மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் 5 முதல் 6 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோக்க வாய்ப்பிருப்பதாகவும், மேலும் பெள்ளட்டி மட்டம், பந்துமை, கரடிப்பள்ளம், கரன்சி உள்ளிட்ட நீர் தேக்கங்களில் குடி நீர் ஆதாரங்களில் போதுமான தண்ணீர் இருப்பதால் இன்னும் சில மாதங்கள் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் இங்குள்ள சாலைகளில் வீணாக செல்வதால் தடுப்பணைக் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.