கோவை : இந்துக்கடவுளை இழிவுபடுத்தி பேசியதாக கூறி தேசிய கைத்தறி பயிற்சியாளர் காரப்பனை கண்டித்து சிறுமுகையில் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் காரப்பன். சிறுமுகை கைத்தறியின் தந்தையாக கருதப்படும் இவர், தேசிய கைத்தறி பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய காரப்பன், இந்து கடவுளான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து இழிவான வகையில் பேசியுள்ளார். அது குறித்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்,து இந்து முன்னணி சார்பில் காரப்பன் மீது தேசவிரோத சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய கோரி கடந்த வாரம் சிறுமுகை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புகார் அளித்து ஒரு வாரம் ஆகியும் இதுவரை கைது செய்யப்படாததை கண்டித்தும் இந்து கடவுளை இழிவுபடுத்தி பேசிய தேசிய கைத்தறி பயிற்சியாளர் காரப்பன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுமுகை நால்ரோடு பகுதியில் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறுமுகை பா.ஜ.க நகர தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அத்திவரதர் மற்றும் கிருஷ்ணர் குறித்து அவதூறாக பேசியதற்கு கண்டன கோசங்களை எழுப்பினர். மேலும், தலைமறைவாக உள்ள காரப்பனை காவல்துறை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவும் வலியுறுத்தினர்.