மத்திய அரசை கண்டித்து இடதுசாரி கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை : தவறான பொருளாதார கொள்கையை கடைபிடிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ கட்சி சார்பில் கோவை சிவானந்தா காலணி பவர் ஹவுஸ் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை : தவறான பொருளாதார கொள்கையை கடைபிடிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ கட்சி சார்பில் கோவை சிவானந்தா காலணி பவர் ஹவுஸ் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக வேலையின்மை, விவசாயிகள் தற்கொலை, தொழில் நசிவு ஏற்பட்டு உள்ளதாகவும் இதனையடுத்து நாடு முழுவதும் கண்டன இயக்கங்களை நடத்த இடதுசாரி கட்சிகளின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதன் ஒரு பகுதியாக, கோவை சிவானந்தா காலணி பவர் ஹவுஸ் முன்பு சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டு கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ரிசர்வ் வங்கியில் எடுத்த ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை பொது முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்திட வேண்டும், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்கிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ18 ஆயிரம் உத்தரவாதம், ராணுவ தளவாட தொழிற்சாலைகள், ரயில்வே, பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியாவை தனியார் மையப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...