நீலகிரியில் மண்சரிவு காரணமாக உதகை - குன்னூர் சாலை போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் சாலையில் நான்கு இடங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக அந்த வழித்தடத்தில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

`

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டு வந்தது. இந்த மழையின் காரணமாக குந்தா அருகே ராமசாமி பாலம், தாலுகா அலுவலகம் மற்றும் உதகை குந்தா சாலையில் இரு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.



இதன் காரணமாக உதகையில் இருந்து மஞ்சூர் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இரவு நேரத்தில் செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல் துறையினர் தடை செய்துள்ளனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மேலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மண் குவியல்களை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...