திருப்பூர் : உணவு பாதுகாப்புத் துறை சார்பில் திருப்பூரில் நடைபெற்ற உணவு திருவிழாவை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் துவங்கி வைத்தார்
திருப்பூர் : உணவு பாதுகாப்புத் துறை சார்பில் திருப்பூரில் நடைபெற்ற உணவு திருவிழாவை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் துவங்கி வைத்தார்.

உணவு பாதுகாப்புத் துறை சார்பில் திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள ஏ.வி.பி தனியார் பள்ளியில் உணவு திருவிழா இன்று நடைபெற்றது. இந்த திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படங்கள் குறித்தும் அவற்றிலிருந்து நாம் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.