மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பி.எஸ்.ஜி கல்லூரியின் 10 ஆயிரம் மாணவர்கள் உருவாக்கிய ரிப்பன் சின்னம்

கோவை : மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியாக, பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் 10,282 மாணவர்களும் ஊழியர்களும் சேர்ந்து கல்லூரி மைதானத்தில் இளஞ்சிவப்பு ரிப்பன் சின்னத்தை உருவாக்கினர்.


கோவை : மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியாக, பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் 10,282 மாணவர்களும் ஊழியர்களும் சேர்ந்து கல்லூரி மைதானத்தில் இளஞ்சிவப்பு ரிப்பன் சின்னத்தை உருவாக்கினர்.



பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெண்கள் படிப்பு மையத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் மார்பக புற்றுநோய் சின்னத்தை (பிங்க் ரிப்பன்) உருவாக்குவதன் மூலம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இந்த விழிப்புணர்வில் பி.எஸ்.ஜி கல்லூரியின் 6500 பெண்கள் உட்பட சுமார் 10300 பேர் கலந்து கொண்டு கல்லூரியின் இளஞ்சிவப்பு நிற ரிப்பன் சின்னத்தை உருவாக்கினர். இதில் விழிப்புணர்வில், மாணவிகளை பாதுகாக்கும் வளையத்தை அக்கல்லூரியின் மாணவர்கள் உருவாக்கினர்.

உலக அளவில் மே 2019 புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் இதனை விழிப்புணர்வு மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.



இந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய பி.எஸ்.ஜி ஐ.எம்.எஸ் ஆர் இயக்குனர் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன், "மார்பக புற்றுநோய் இந்தியாவில் பெண்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதாகவும், புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து முழுமையாக சிகிச்சையளிக்க விழிப்புணர்வும் மிக முக்கியம் என்றார்.

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி ஐ.எம்.எஸ் ஆர் புற்றுநோயியல் நிபுணர் மதுலிகா விஜயகுமார் பேசுகையில், மார்பக புற்றுநோய் குறித்து பெண்கள் தயக்கமின்றி, நோயை முழுமையாக குணப்படுத்த விரைவாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என்றும் இந்த 'பிங்க் மாதத்தில்', தாங்கள் ஏற்பாடு செய்துள்ள இலவச புற்றுநோய் விழிப்புணர்வு முகாமை 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு நோயை விரைவாகக் கண்டறியும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடல் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்றும் ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி ஆகியவை நோய்களைத் தவிர்ப்பதற்கான இரண்டு முக்கியமான விஷயங்கள் என்று நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் டி.பிருந்தா கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...