கோவை : மதுரை மாவட்டம் பாலமேடு மரவபட்டி அரசு பள்ளியில் அருந்ததிய மாணவன் சரவணகுமார் தாக்கபட்டதை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிடர் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம் பாலமேடு மரவபட்டி அரசு பள்ளியில் பயிலும் அருந்ததிய மாணவன் சரவணகுமார் அப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ம் தேதி பேருந்து நிலையத்தில் புத்தகப் பையை சரவணகுமார் எடுத்து மறைத்து வைத்ததாக, அதே பள்ளியில் பயிலும் மாணவன் ஈஸ்வரன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தான் அதை எடுக்கவில்லை என சரவணகுமார் கூறியதால் என்னை எதிர்த்து பேசுகிறாயா என கூறி, ஈஸ்வரன் தன்னிடம் இருந்த பிளேடு கொண்டு சரவணகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முதுகு பகுதியில் பலத்த காயம் அடைந்த சரவணகுமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிட தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அருந்ததிய மாணவர் சரவணகுமார் மீதான சாதி வெறி தாக்குதலை கண்டித்து கண்டன் முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் நடைபெறும் தீண்டாமை வன்கொடுமைகளில் ஈடுபடுவார்கள் மீது அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.