கோவை : வரும் 19ம் தேதி நடைபெறும் ஹமாம் கேட்வே 2019 நிகழ்வில் இந்தியா முழுவதிலும் இருந்து 10,600 பள்ளிகளில் இருந்து 85,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளதாக எலைட் சர்க்கிள் நிறுவனரும் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர். பிரதீப்குமார் தெரிவித்தார்.

எலைட் சர்க்கிள் மாணவர் நல அமைப்பு சார்பில் கடந்த 19 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கேட்வே எனும் கலை இலக்கிய போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு, வரும் சனிக்கிழமை இந்த நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கில் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இது குறித்து நிகழ்ச்சி எலைட் சர்க்கிள் நிறுவனரும் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர். பிரதீப்குமார் கூறுகையில், வரும் 19ம் தேதி நடைபெறும் ஹமாம் கேட்வே 2019 நிகழ்வில் இந்தியா முழுவதிலும் இருந்து 10,600 பள்ளிகளில் இருந்து 85,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கொடிசியா வளாகத்தில் A,B,C,D என நான்கு அரங்குகளில் இந்த போட்டிகள் நடத்தபட உள்ளதாகவும் ஓவிய போட்டி, வண்ணம் தீட்டுதல், தமிழ் கட்டுரை போட்டி, திருக்குறள் எழுதுதல், முகத்தில் வண்ணம் தீட்டுதல், குழு நடன போட்டி என பல்வேறு வகையான போட்டிகள் நடக்க உள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு 84,614 பேர் கலந்து கொண்டதாகவும் இந்த வருடம் இதுவரை 76,000 முன்பதிவு செய்து உள்ளதாகவும் மேலும் பலர் பதிவு செய்து வருவதால் 85,000 மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், உலக அளவில் அதிகமான மாணவர்கள் கலந்து கொள்ளும் கலை இலக்கிய போட்டி, ஓவிய போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி, எழுத்து தேர்வு போட்டிகள் என உலக சாதனை நிகழ்ச்சியாக இது இடம்பெறும் என தெரிவித்த அவர், இந்த நிகழ்வில் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் தமிழக சிலம்பாட்ட கழகத்தை சேர்ந்த 200 பேர் 4 வயது முதல் 12 வயது வரை உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக கூறினார்.
இந்த போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா, குஜராத், டெல்லி, ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் ஒட்டு மொத்த போட்டிகளில் வெற்றி பெறும் சிறந்து அணிக்கு சுழற்கோப்பை வழங்கபட உள்ளதாகவும் தனி நபர்களுக்கு, குழு சான்றிதழ் பங்கேற்றவர் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.