கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கத்தியால் குத்தி இளைஞரிடமிருந்து 50 லட்சம் ரூபாய் பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில், பணம் இருந்த பையில் வெற்று காகிதங்கள் மட்டுமே இருந்ததுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கத்தியால் குத்தி இளைஞரிடமிருந்து 50 லட்சம் ரூபாய் பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில், பணம் இருந்த பையில் வெற்று காகிதங்கள் மட்டுமே இருந்ததுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தர்ஷனும் (23) சுங்கம் பகுதியை சேர்ந்த ராகுல் குமாரும் (23) இணைந்து சாயிபாபாகாலனியில் தொழில் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்கள், நேற்று முன்தினம் இரவு, கணியூர் சுங்கச்சாவடி அருகே வந்த போது, மர்மநபர்கள் இவரது வாகனத்தை இடித்து விட்டு, ராகுல்குமாரை கத்தியால் வெட்டி அவரிடம் இருந்த ரூ.50 லட்சம் தொகை இருந்த கைப்பையை பறித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனிதா, துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் தர்ஷனும், ராகுல் குமாரும் தொழில் முன்னேற்றத்திற்காக திருப்பூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை அணுகி உள்ளனர். இதில் பிரபாகரன் ரூ.50 லட்சம் கடன் தருவதாக கூறி, சொத்து பத்திரமும் கடன் பரிமாற்ற கட்டணமாக இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி பிரபாகரன் திருப்பூரில் வைத்து ஒரு பேக்கை ராகுல் குமாரிடம் கொடுத்து அதில் ரூ.30 லட்சம் ரொக்கமும், ரூ.20 லட்சத்துக்கான காசோலையும் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதை நம்பி அந்த பேக்கை வாங்கிக் கொண்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி வந்த போது, கத்தியால் குத்தி பணம் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் என சந்தேகித்த போலீசார், தற்போது ஆறு பேரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பறிக்கப்பட்ட அந்த பேக்கில் ரூ.30 லட்சத்துக்கு சில அசல் ரூபாய் நோட்டுகளும், பெரும்பாலானவை வெள்ளை பேப்பர் வைக்கப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான திருப்பூரைச் சேர்ந்த பிரபாகரன் உட்பட 9 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.