தீபாவளிக்கு விற்பனை செய்யும் உணவுப் பொருட்கள் தரமில்லை என்றால் வாட்ஸ்அப் மூலம் புகார் கொடுக்கலாம் : உணவு பாதுகாப்பு துறை அதிகாரி

கோவை : தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்யும் உணவுப் பொருட்களில் தரமில்லை என்றால் பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலம் புகார் கொடுக்கலாம் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.


கோவை : தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்யும் உணவுப் பொருட்களில் தரமில்லை என்றால் பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலம் புகார் கொடுக்கலாம் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் விஜய் பார்க் இன் ஹோட்டலில் இனிப்பு காரம் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தீபாவளி விற்பனைக்கு இனிப்பு கார வகைகள் தரமாக தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.



அதேபோல, கூடுதல் நிறமிகள் சேர்க்கப்படக்கூடாது, பயன்படுத்திய எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்தப்படுத்த கூடாது உள்ளிட்ட பல உணவு பாதுகாப்பு வழிமுறைகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இனிப்பு காரம் தயாரிப்பாளர்களுக்கு ஆலோசனைகளாக வழங்கினர்.

சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன் பலகாரங்கள் தயாரிக்கும் தொழிலாளர் கைகளை நன்றாக கழுவிய பின்னர் சமைக்கவேண்டும் எனவும் கண்டிப்பாக இனிப்பு மற்றும் கார வகை தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று இருக்க வேண்டும் எனவும் இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் பேசுகையில்;-







தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கார விற்பனையாளர்கள் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும், உணவு பாதுகாப்புத் துறை சார்பில் தீபாவளி தொடங்கும்வரை விற்பனை மையங்கள் மற்றும் தயாரிப்பு மையங்களில் திடீர் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும், உணவு பொருட்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணிற்கு தங்களது புகாரினை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...