மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை : விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், மதியத்துக்கு மேல் வானத்தில் கருமேகம் சூழ்ந்து இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் இடைவிடாமல் கொட்டி தீர்த்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், மதியத்துக்கு மேல் வானத்தில் கருமேகம் சூழ்ந்து இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் இடைவிடாமல் கொட்டி தீர்த்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காரமடை,சிறுமுகை, தோலம்பாளையம், வெள்ளியங்காடு, ஆலாங்கொம்பு, நெல்லித்துறை ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீலகிரி மாவட்டத்தின் அடிவார பகுதியாக இருந்தாலும் மேட்டுப்பாளையத்தை பொருத்தவரை வடகிழக்கு பருவமழையே அதிக அளவில் இருக்கும்.

இந்த நிலையில், வரும் 17ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையானது துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் முன் கூட்டியே துவங்கிய பருவமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...