கோவை : கோவையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 23ம் தேதி கோவை ரயில் நிலையம் முன்பு கையெழுத்து இயக்கம் நடத்த இருப்பதாக "கோவை- பழனி" பயணிகள் ரயில் சேவை துவக்க விழாவில் கலந்து கொண்ட கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேட்டியளித்த கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி .ஆர். நடராஜன், கோவையில் இருந்து ராமேஸ்வரம், மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு கடந்த காலங்களில் இயக்கப்பட்டதை போல மீண்டும் ரயில் சேவை இயக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இதேபோன்று, கோவை - பெங்களூரு இடையே இரவு நேர ரயில் சேவையும் துவங்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாகவும் சேலம் ரயில்வே கோட்டம் இந்த 4 ரயில்களையும் விரைவில் இயக்க வேண்டும் என வலியுறுத்தியும், இந்த பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தும் விதமாக வரும் 23ம் தேதி கோவை ரயில் நிலையம் முன்பாக கையெழுத்து இயக்கம் நடத்த இருப்பதாகவும் மக்களவை உறுப்பினர் பிஆர் நடராஜன் தெரிவித்தார்.
மீட்டர் கேஜ் பாதையாக இருந்ததை அகல ரயில் பாதையாக மாற்றிய பின்னர் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது கோவை மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர் பாலசுப்ரமணியம், கோவை - ராமேஸ்வரம் இடையிலான பயணிகள் ரயிலை உடனடியாக துவங்க ரயில்வே துறையும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.