நீலகிரி : குன்னூர் முதல் உதகை வரை மலை ரயில் சேவை துவக்கி இன்றுடன் 111வது மலை ரயில் தினம் என்பதால், சுற்றுலா பயணிகளுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து உதகைக்கு நீராவி இன்ஜின் மூலம் முதல் முதலாக 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி முதல் மலை ரயில் சேவை போக்குவரத்து துவங்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை சுமார் 111 ஆண்டுகள், குன்னூர் முதல் உதகை வரை உள்ள மலைப் பாதை, பாலங்கள், குகைகளைத் தாண்டி குழந்தை போல் தவழ்ந்து ஓடும் மலை ரயிலுக்கு வயது இன்றுடன் 111 என்பதால் இன்று குன்னூரில் இருந்து உதகைக்கு 100 பயணிகளுடன் வந்த மலை ரயில் முன்பு சுற்றுலாப் பயணிகளுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
மலைரயில் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மலை ரயிலில் பயணம் செய்து உதகை வந்த அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.