நீலகிரி : குன்னூர் அருகே இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு கார், பைக் என வாகனங்கள் புதைந்தன. மேலும், 5 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் இன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதில், அருவங்காடு பாய்ஸ் கம்பெனி பகுதியில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் புதைந்தன.

இதேபோல, வெலிங்டன் சிங்காரத்தோப்பு பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து மாற்று இடங்களில் தங்க வைக்கும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.