கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விதிமுறைகளை மீறி நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக, விதிமுறைகளை மீறி நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக, விதிமுறைகளை மீறி நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பிரதான கட்டிடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிகாரிகளின் வாகனங்கள், வாகன நிறுத்தும் இடத்திலும் அலுவலக பின்புறத்திலும் நிறுத்தப்பட்டன.

இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மற்றும் அலுவலகத்தில் பணி புரிபவர்கள் சிலர் வாகனங்கள் செல்ல வழி இல்லாத வகையில், இடையூறாக நிறுத்தி வைத்து இருந்தனர். இதனைக் கண்ட மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, அனைத்து வாகனங்களுக்கும் பூட்டு போட காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். பின்னர், தங்களது தவறுக்கு ஊழியர்கள் வருத்தம் தெரிவித்து வாகனங்களை எடுத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் மீண்டும் வழக்கம் போல் வழியை மறைத்து வாகனங்கள் இன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) உமா மகேஸ்வரி, அந்த வாகனங்களை அப்புறபடுத்த காவல் உத்தரவிட்டதின் பேரில், அங்கு வந்த காவல் வாகனம் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்ட ஆறு வாகனங்களைக் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். மேலும், ஒரு வாகனத்திற்கு 250 ரூபாய் வீதம் ஆறு வாகனங்களுக்கு 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...