கோவையில் செங்கல்சூளை தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை ; இளைஞர் கைது

கோவை : கோவை தடாகம் அருகே செங்கல் சூளை தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை : கோவை தடாகம் அருகே செங்கல் சூளை தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஐ பி எஸ் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கோவையில் கஞ்சா போன்ற போதை பொருட்களை கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர்கள் அகியோரை குறிவைத்து விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவை தடாகம் அருகே உள்ள செங்கல் சூளை தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் நேற்று சின்ன தடாகம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வடக்கு வீதி அருகே சந்தேகத்துக்குரிய இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து, போலீசார் அந்த இளைஞரை பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பி ஓடினார். இதையடுத்து தப்பி ஓடிய இளைஞரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவரின் மகன் ரவி (36) என்பது தெரியவந்தது. மேலும் அவர் செங்கல் சூளையில் பணியாளராக பணிபுரிந்து கொண்டு அங்குள்ள தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து ரவியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1250 கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்து, அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...