கோவையில் வாங்கிய கடனுக்காக வீட்டை பறித்துக்கொண்டு பாலியல் மிரட்டல் விடுப்பதாக பெண் புகார்

கோவை : கோவையில் தனியார் பைனான்ஸில் வாங்கிய கடனுக்காக வீட்டை மிரட்டி எழுதி வாங்கிவிட்டதாகவும், வீட்டை மீட்டுக்கொடுக்கும் படி கூறி மித்ரா என்ற பெண் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கோவை : கோவையில் தனியார் பைனான்ஸில் வாங்கிய கடனுக்காக வீட்டை மிரட்டி எழுதி வாங்கிவிட்டதாகவும், வீட்டை மீட்டுக்கொடுக்கும் படி கூறி மித்ரா என்ற பெண் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மித்ரா (29). இவர் தனது படிப்பிற்காக வங்கியில் கடன் வாங்கி இருந்த நிலையில், கடனை திருப்பி செலுத்த வங்கி நிர்வாகம் வற்புறுத்திய நிலையில், கடந்த ஆண்டு காளப்பட்டியில் உள்ள வீட்டுப்பத்திரத்தை அடகு வைத்து 22 லட்சம் கடன் வாங்கி வங்கிக் கடனை அடைத்தார்.

ராஜேஸ் என்ற பைனான்சியரிடம் வீட்டின் சொத்து பத்திரத்தை அடகு வைத்து 3 மாதத்தில் திருப்பிக் கொள்வதாக கூறிய நிலையில், பத்திரத்தை மித்ராவால் திருப்ப முடியவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, ராஜேஸின் நண்பர் பாண்டியராஜன் பெயரில், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் மித்ராவின் சொத்துகள் பதிவு செய்யப்பட்டு விட்டது.

இந்த நிலையில், பணத்தை வட்டியுடன் செலுத்தி விடுவதாகவும் வீட்டை தங்களுக்குத் திருப்பி கொடுக்கும் படியும் மித்ரா பைனான்ஸ் ராஜேசிடம் கேட்ட போது, அவர் மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததுடன், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.



இதனையடுத்து, மித்ரா இன்று தாயார் உமாராணியுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.

அப்போது இச்சம்பவம் குறித்து பேசிய மித்ரா, தன்னையும், தனது பெற்றோரையும் மிரட்டி சொத்தை பைனான்சியர் ராஜேஷ், பாண்டியராஜன் ஆகியோர் அபகரித்து கொண்டதாகவும், வீட்டை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.



மேலும், ராஜேஸ் தவறான முறையில் தன்னிடம் நடந்து கொள்ள முயல்வதாகவும், தனது தாயை கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து புகார் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...