மாநகராட்சிப்பள்ளிகள்‌ அரசுப்‌ பொதுத்‌ தேர்வுகளில்‌ 100% தேர்ச்சி இலக்காக பணியாற்ற வேண்டும்‌ : மாநகராட்சி ஆணையர்

கோவை : கோவை மாநகராட்சிப்பள்ளிகள்‌ 10 மற்றும்‌ +1, +2 அரசுப்‌ பொதுத்‌ தேர்வுகளில்‌ 100% தேர்ச்சி இலக்காக பணியாற்ற வேண்டும்‌ என்று மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்தார்.

கோவை : கோவை மாநகராட்சிப்பள்ளிகள்‌ 10 மற்றும்‌ +1, +2 அரசுப்‌ பொதுத்‌ தேர்வுகளில்‌ 100% தேர்ச்சி இலக்காக பணியாற்ற வேண்டும்‌ என்று மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ அவர்கள்‌ தலைமையில்‌ மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது;-

கோவை மாநகராட்சிப்‌ பள்ளிகளின்‌ ஆசிரியர்கள்‌, பணியாளர்கள்‌ குறித்த நேரத்தில்‌ பள்ளிக்கு தவறாது வரவேண்டும்‌ எனவும் பள்ளிகளின்‌ மாணவர்களுக்கு சத்துணவு தரமாக வழங்கப்படுவதைக் கண்காணிக்க வேண்டும்‌ என்றும் பள்ளிகளின்‌ நூலகங்களிலுள்ள புத்தகங்களை நாள்தோறும்‌ மாணவர்கள்‌ படிக்க செய்ய வேண்டும்‌ என்றார்.

மேலும்‌, மாணவர்களின்‌ கூடுதல்‌ திறமைகளை வளர்க்கவும்‌ ஆசிரியர்கள்‌ பணியாற்ற வேண்டும்‌ எனவும் பள்ளிகளின்‌ சுற்றுப்புறம்‌ தூய்மையாக இருக்கவும்‌, மழைக்காலங்களில்‌ பள்ளிகளின்‌ வளாகத்தில்‌ தண்ண தேங்காமல்‌ பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்றவர், தூய்மைப்‌ பணியாளர்களைக்‌ கொண்டு பள்ளிகள்‌ தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்‌ என்று கூறினார்.

நடப்பாண்டில்‌ 10-ம்‌ வகுப்பு மற்றும்‌ +1, +2 அரசு பொதுத்‌ தேர்வுகளில்‌ மாநகராட்சியின்‌ பள்ளிகளில்‌ 100 சதவீதம்‌ தோச்சிபெறுவதை இலக்காக கொண்டு அனைத்து ஆசிரியர்களும்‌ பணியாற்ற வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌, அவர்கள்‌ தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...