வால்பாறையில் மின்தடை காலத்தில் தொலைபேசி நிலையம் முற்றிலும் முடக்கம் ; பொதுமக்கள் வேதனை

கோவை : வால்பாறையிலுள்ள பி.எஸ்.என்.எல் தொடர்பகத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்தும் டீசல் இல்லாததால் மின்தடை காலத்தில் தொலைபேசி நிலையம் முற்றிலும் முடங்கி விடுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை : வால்பாறையிலுள்ள பி.எஸ்.என்.எல் தொடர்பகத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்தும் டீசல் இல்லாததால் மின்தடை காலத்தில் தொலைபேசி நிலையம் முற்றிலும் முடங்கி விடுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் பி,எஸ்.என்.எல் நிறுவனம் மூலமாக இணையதள சேவைகள் வங்கிகள் இ.சேவை மையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடை காரணமாக பி.எஸ்.என்.எல் மூலம் வழங்கப்படும் மொபைல் சேவை, தரைவழி போன் சேவை மற்றும் இணையதள சேவைகள் பாதிக்கப்படுகின்றன.

வால்பாறையிலுள்ள பி.எஸ்.என்.எல் தொடர்பகத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்தும் டீசல் இல்லாததால் மின் தடை காலத்தில் தொலைபேசி நிலையம் முற்றிலும் முடங்கி விடுகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் இயங்கும் வங்கிகள், ஏ.டி.எம் மையங்கள், அரசு மற்றும் தனியார் இ.சேவை மையங்கள் முற்றிலும் பாதிப்படைகின்றன. இதன் காரணமாகத் தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை வங்கியிலிருந்து எடுக்க இயலாமல் தவித்து வருகின்றனர்.



மேலும், மக்கள் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ். உட்பட பல்வேறு சான்றிதழ்கள் பெற முடியாமல் அலைந்து வருகின்றனர். இந்நிலையை மின் தடை காலத்திலும் தொலைபேசி நிலையம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...