கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் சேரன் நகர் பகுதியில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து காரின் பின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் சேரன் நகர் பகுதியில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து காரின் பின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
மேட்டுப்பாளையம் சாலையில் எப்போதும் தனியார் பேருந்துகள் வேகமாக செல்வதும், விபத்துக்கள் ஏற்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. வேலை நாட்களில் எப்போதும் கூட்டமாக காணப்படும் இந்த சாலையில், இன்று காலை மேட்டுப்பாளையம் - கோவை செல்லும் தனியார் பேருந்து ஒன்று சேரன் நகர் அருகே முன்னே வலது பக்கம் செல்வதற்காக நின்று கொண்டிருந்த காரின் மீது வேகமாக மோதியது.
இதில் உயிர் விபத்து இல்லையென்றாலும் காரின் பயணித்த கணவர், மனைவி இருவரும் இறங்கி வந்து பேருந்து ஓட்டுனரை விபத்துக்கான காரணம் கேட்டதற்குப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நான்கு நடத்துனர் வேகமாக பேருந்தின் கீழே இறங்கி வந்து கணவர் மற்றும் மனைவியிடம் திமிராக பதில் கூறினர். பேருந்து வேகமாக வந்த போது பிரேக் கருவி கட்டுப்பாட்டை இழந்ததாகவும் அதனால் பேருந்து நிற்காமல் காரின் மீது மோதியதாகவும் ஓட்டுநர் மற்றும் நான்கு நடத்துனர் திமிராக தெரிவித்தனர்.
இதில் ஒரு பேருந்தில் ஒன்று மட்டும் இரண்டு நடத்துனர் இருப்பதற்கு பதில் 4 பேர் இருப்பது வாகன சட்டத்திற்கு புறம்பாக உள்ளது. பிரேக் கருவி நிற்காததற்கு முக்கியம் காரணம் பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றி வந்ததும், அதிவேகமாக வந்ததும் இவ்விபத்துக் காரணம் என்றே கூறலாம். மேலும், தொடர்ந்து தனியார் பேருந்துகள் மீதான குற்றம் அதிகரித்து வருவதும் அரசு கண்டு காணாமல் இருப்பதும் வேதனை அளிப்பதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.