மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம் ; பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்‌

கோவை : கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ திங்கட்கிழமை தோறும்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெறும்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ பயனாளிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில்‌ முதியோர்‌ உதவித்தொகை பட்டா மாறுதல்‌, புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்‌ குறித்த மனுக்களை பொதுமக்கள்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்களிடம்‌ அளித்தனர்‌. பொதுமக்களிடம்‌ 450 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம்‌ பொதுமக்களின்‌ கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள்‌ உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்‌.

அதனை தொடர்ந்து, தோட்டக்கலை மற்றும்‌ மலைப்பயிர்கள்‌ துறையின்‌ மூலம்‌ விளைப்பொருட்களுக்கு சிப்பம்‌ கட்டும்‌ அறை அமைக்க 2 பயனாளிகளுக்கு மானிய தொகை தலா ரூ.2,00,000/- பெறுவதற்கான ஆணையும்‌, வேளாண்மைத்‌ துறையின்‌ மூலமாக சோலார்‌ விளக்கு பொறி ஒரு பயனாளிக்கு ரூ.4,000, மதிப்பிலும்‌, தேசிய உணவு பாதுகாப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ கைத்‌ தெளிப்பான்கள்‌ 2 பயனாளிகளுக்கு தலா ரூ.3,000,/- மதிப்பிலும்‌, நுண்‌ உரங்கள்‌ அடங்கிய பாக்கெட்‌ ஒரு பயனாளிக்கு ரூ.1,80/- மதிப்பிலும்‌, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறையின்‌ மூலம்‌ இலவச தையல்‌ இயந்திரம்‌ 1 பயனாளிக்கு ரூ.3,573 மதிப்பிலும்‌, தொழிலாளர்‌ நலத்துறையின்‌ மூலம்‌ விபத்து மரண உதவித் தொகையாக 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1,02,000/- என மொத்தம்‌ 12 பயனாளிகளுக்கு ரூ.9,23,753/-மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ வழங்கினர்‌.

இக்கூட்டத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌, கூட்டுறவு சங்கங்களின்‌ இணைப்‌ பதிவாளர்‌ பழனிச்சாமி, மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலர்‌ பிரபாகரன்‌, மாவட்ட வழங்கல்‌ அலுவலர்‌ குமரேசன்‌, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலர்‌ மணிமொழி, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌(பொது) உமாமகேஸ்வரி, மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...