திருப்பூர் : திருப்பூரில் கந்துவட்டி கும்பலிடமிருந்து தனது குடும்பத்தை காப்பாற்றக் கோரி பாதிக்கப்பட்டவர் குடும்பத்தோடு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அம்மா பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெய்கணேஷ் பால்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இதனிடையே, தொழில் நிமித்தமாக ஜெய்கனேஷ் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் வட்டிக்குப் பணம் வாங்கியுள்ளார். இதனிடையே பணம் வாங்கிய தொகைக்கு மேல் பணம் கொடுத்தும், முழு தொகையைக் கொடுக்குமாறு வட்டிக்கு பணம் கொடுத்த உரிமையாளர்கள் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் ஆதாயம் பெற்றுக்கொண்டு, புகார் அளித்த தன்னை மிரட்டி வருவதாக கூறும் ஜெய்கணேஷ், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து கந்துவட்டி கும்பலிடம் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றக் கோரி குடும்பத்துடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தார்.