வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு ஆன்லைன் மூலம் டெண்டர் ; வரும் அக்., 24ம் தேதி கடைசி நாள்

கோவை : மாவட்டம் வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்காக கோவை மாநகராட்சியால் ஆன்லைன் மூலம் டெண்டர் விட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெண்டர் கோருவதற்கு வரும் அக்., 24ம் தேதி கடைசி நாளாகும்.

கோவை : மாவட்டம் வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்காக கோவை மாநகராட்சியால் ஆன்லைன் மூலம் டெண்டர் விட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெண்டர் கோருவதற்கு வரும் அக்., 24ம் தேதி கடைசி நாளாகும்.

கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கோவை மாவட்டம் வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு பல ஆண்டுகளாக இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கி விட்டது.

இந்த நிலையில், இத்திட்டத்திற்கு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப அனுமதி கிடைத்துள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் டெண்டர் விட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தேச பேருந்து நிலையத்தில் வெளியூர், நகர பேருந்துகளின் வழித்தடங்கள், ஆம்னி வழித்தடங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், ஏடிஎம், பொது நடைபாதை உள்பட உட்கட்டமைப்பு வசதிகள் இடம்பெறும். இது தவிர விடுதிகள், பயணிகள் ஓய்வு அறை, பயணிகள் தங்கும் அறை, பேருந்து நிறுத்தும் பகுதி உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன.

எந்த நேரத்திலும் 140 ஆம்னி பேருந்துகள் மற்றும் 33 நகர பேருந்துகளை நிறுத்தும் வசதிகளுடன் 1200 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 104 கார்களை நிறுத்துவதற்கான ஏற்பாடு மற்றும் ஆம்னி பஸ் ஸ்டாண்டிற்கு இடமளிக்கும் எதிர்கால திட்டம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளது.

இது தவிர 32,152 சதுர அடி பரப்பளவில் 71 கடைகள், 2243 சதுர அடியில் 11 ஏடிஎம்கள், 2,194 சதுர அடி பரப்பளவில் 7 போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 7,862 சதுர அடி பரப்பளவில் 2 பொது தங்குமிடங்கள் தவிர, ஐபிடி அனைத்தும் அமைக்கப்பட உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் கூறியது போல, இந்த திட்டத்திற்கான ஆன்லைன் டெண்டர் வரும் அக்டோபர் 24 வரை திறந்திருக்கும்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...