குன்னூரில் மலைரயில் எஞ்சின்களை பராமரிக்க மின்சாரம் மூலம் 10 டன் எடையை தூக்கும் ஜிப் கிரேனுக்கு வரவேற்பு

நீலகிரி : சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டு நீலகிரியில் இயங்கி வரும் மலை ரயில் எஞ்சின்களை குன்னூரில் பராமரிப்பதற்காக மின்சாரம் மூலம் 10 டன் எடையை தூக்கும் ஜிப் கிரேன் வழங்கப்பட்டிருப்பது இங்குள்ள தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

நீலகிரி : சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டு நீலகிரியில் இயங்கி வரும் மலை ரயில் எஞ்சின்களை குன்னூரில் பராமரிப்பதற்காக மின்சாரம் மூலம் 10 டன் எடையை தூக்கும் ஜிப் கிரேன் வழங்கப்பட்டிருப்பது இங்குள்ள தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உதகை-குன்னூர் மற்றும் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இந்த மலை ரயிலை இயக்க தற்போது 7 'எக்ஸ்' கிளாஸ் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த எஞ்சின்கள் பராமரிப்பதற்காக, இதுவரை மிகவும் பழமை வாய்ந்த கைகளால் இயக்கப்படும் கிரேன் பயன்படுத்தப்பட்டு வந்தது. பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த கிரேன் மூலம் எஞ்சின்களை கழற்றி பராமரித்து வந்தனர். இதனால் மிகவும் சிரமம் இருந்தது.



இந்த நிலையில், தென்னக ரயில்வே சார்பில் மின்சாரம் மூலம் இயங்கும் 10 டன் அளவு கொண்ட என்ஜின்களை கழற்றி மாற்ற வசதியாக ஜிப் கிரேன், குன்னூர் பணிமனைக்கு வழங்கப்பட்டது. இதனைப் பயன்படுத்த மிகவும் எளிதாகவுள்ளதால் இந்த கிரேன் மலை ரயில் பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...