ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு ; ஆட்சியரிடம் தேசிய முற்போக்கு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் மனு

கோவை : கோவை மாநகர ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட தேசிய முற்போக்கு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : கோவை மாநகர ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட தேசிய முற்போக்கு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.




இதுகுறித்து, தேசிய முற்போக்கு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :

கோவை மாநகரில் சமீப காலமாக ஆட்டோ ஓட்டுனர்களை தாக்குதலுக்கு உட்படுத்தி கொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் கோவை சரவணம்பட்டியில் பட்டப்பகலில் கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த சமூக விரோதிகள் தனது கருவியான கரண்டி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோ ஓட்டுனரை தாக்கி குத்தி கொலை செய்த சம்பவம் கோவையையே குலைநடுங்க வைத்தது. மேலும் பல இடங்களில் கொலை கொள்ளை அரங்கேறி உள்ளன.

இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கோவை மாநகர ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும், தொழிலாளர் நல வாரியத்தில் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மட்டும் படிப்பு செலவை நலவாரியமே ஏற்றுக் கொள்கிறது. அதே போல, ஆட்டோ ஓட்டுனர்களின் குழந்தைகளுக்கு படிப்பு செலவை அரசே ஏற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

மத்திய, மாநில அரசுகள் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு மானியத்துடன் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...