நீலகிரி : நீலகிரி மாவட்டம் ஓவேலிப் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைத்துத் தரக்கோரி பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டும் சாலைகள் சேதமடைந்தன.
இந்த கனமழையில் கூடலூர் ஓவேலி பகுதியை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டும் பாலங்கள் துண்டித்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் மாலையில் பள்ளிகளை முடித்து வீடு திரும்பும் மாணவ, மாணவியர்கள் நடந்த செல்லும் நிலையில் யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், அவசர காலங்களில் மருத்துவமனைகளுக்கு நடந்து செல்லும் சூழ்நிலை உள்ளதால் மாற்றுப்பாதை சாலைகளில் பேருந்துகளை இயக்கவும், பழுதடைந்த சாலையை சீரமைத்துத் தரக்கோரியும் பள்ளி மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்