விதை மஞ்சள்களை 100 சதவீதம் மானிய விலையில் வழங்கி மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்க கோரிக்கை

கோவை : கோவையில் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 100 சதவீத மானிய விலையில் விதைகளைக் கொடுக்க வேண்டும் என கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : கோவையில் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 100 சதவீத மானிய விலையில் விதைகளைக் கொடுக்க வேண்டும் என கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டத்தின் பெரும்பாலான புறநகர் பகுதிகளில் மஞ்சள் விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளில் மஞ்சள் விவசாய பரப்பு பல ஆயிரம் ஏக்கரில் இருந்து சில நூறு ஏக்கர்களாக குறைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

மஞ்சள் குவிண்டாலுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ 5500 முதல் 8500 ரூபாயாக இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களில் விலைகள் 6500 ரூபாயாக குறைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மஞ்சள் விவசாயத்தை ஊக்குவிக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.



மேலும், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மஞ்சளை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெறலாம் என விதி இருந்தாலும் அதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை இருப்பதாக கூறிய அவர்கள் விற்பனை கூடங்களில் போதிய இருப்பு வைக்கும் வசதிகள் இல்லாததே இதற்கு காரணம் எனவும் இப்பிரச்சனையை தீர்க்க 100 சதவீத மானிய விலையில் மஞ்சள் விதைகள் தருவதோடு, உற்பத்தி செலவீனங்களை அரசே முழுமையாக ஏற்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...