கோவை : ஆடுகளை விஷம் வைத்து கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சத்திய நகரைச் சார்ந்த ஜெகநாதன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்க வந்த மனுவில் கூறியிருப்பதாவது :
கோவை பி.பி.எஸ் காலேஜ் ரோடு அருகே சத்திய நகர் பகுதியில் கடந்த 30 வருடங்களாக ஆடுகளை மேய்த்து தொழில் நடத்தி வருகிறேன். அதே பகுதியில் வீட்டின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள நபர்கள் முன்விரோதம் காரணமாக நான் வளர்த்து வந்த 4 ஆடுகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார்கள். அவர்கள் மீது வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனிடையே புகார் கொடுத்ததாக என்னை அவர்கள் மிரட்டுகிறார்கள். எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், ஆடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே தர்ணாவில் ஈடுபட்ட ஜெகநாதனை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து சமாதானம் பேசி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.