தென் மாவட்டங்களுக்கு மீண்டும் ரயில் சேவையை துவக்க கோரி தொடர் போராட்டம் நடத்தப்படும் : பி.ஆர்.நடராஜன் எம்.பி

கோவை : கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் துவக்கக் கோரி தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை : கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் துவக்கக் கோரி தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை - பொள்ளாச்சி இடையேயான அகல ரயில் பாதை பணிகள் காரணமாக, கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டன. பணிகள் நிறைவடைந்து அத்தடத்தில் ரயில் சேவை துவங்கிய நிலையிலும், தென்மாவட்டங்களுக்கான ரயில்கள் இயக்கப்படவில்லை. 

இந்நிலையில், தென்மாவட்டங்களுக்கான ரயில் சேவைகளை மீண்டும் துவக்க கோரி, போராட்டம் நடத்துவது தொடர்பாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. 



இதில் தபெதிக, திமுக, சிபிஎம், மதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை - ராமேஸ்வரம், கோவை - தூத்துக்குடி, கோவை - மதுரை மற்றும் கோவை - பெங்களூரு இரவு நேர ரயில் உள்ளிட்ட ரயில் சேவைகளை துவக்க வேண்டுமென வலியுறுத்தினார்.



தென் மாவட்டங்களுக்கு மீண்டும் ரயில் சேவையை துவக்கக் கோரி, வருகின்ற 23ம் தேதி கோவை ரயில் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவில்லை எனில், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...