நீலகிரி மாவட்டம், கெத்தையில் மீண்டும் காட்டுயானைகள் அட்டகாசம்; இரு வீடுகள் சேதம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே கெத்தை பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் மீண்டும் அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே கெத்தை பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் மீண்டும் அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

மஞ்சூர் அருகே கெத்தை பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதுடன், இரவு நேரங்களில் மின்வாரிய குடியிருப்பு வளாகத்தில் முகாமிடுவதால் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த வாரம், 5 காட்டு யானைகள் மின்வாரிய ஆய்வு மாளிகை கதவுகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியதுடன் மின்வாரிய ஊழியரின் வீட்டு கதவை யானைகள் உடைத்தது. இச்சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக வீட்டுக்குள் இருந்த ஊழியர் உயிர் தப்பினார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கெத்தை மின்வாரிய குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் காலியாக இருந்த ஒரு வீட்டின் கதவை உடைத்தது. தொடர்ந்து செல்லதுரை என்பவரின் வீட்டையும் உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது. தகவலறிந்த வனத்துறையினர் நேற்று காலை கெத்தை பகுதிக்கு சென்று, அங்கு முகாமிட்டிருந்த காட்டு யானைகளை பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்கு விரட்டினர்.

அந்த யானை கூட்டமானது மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...