கோவையில் பரவும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ; 184 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பினால் மொத்தம் 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பினால் மொத்தம் 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதனையடுத்து, காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், தென்மேற்குப் பருவமழையை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன.

இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு என்று பிரத்தியேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற வருபவர்களுக்கும் 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பினால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவிடுகிறது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி டெங்கு காய்ச்சல் பாதிப்பில் 14 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல காய்ச்சல் பாதிப்பினால் 94 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 5 சிறுவர்கள் உள்பட 32 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கு 28 சிறுவர்கள் உட்பட 152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் கடந்த ஒன்பதாம் தேதி வந்த தகவலின்படி டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் 108 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 184 பேர் சிகிச்சை பெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...