கோவை : வால்பாறையை அடுத்த குரங்கு முடி எஸ்டேட்டில் உள்ள கோவிலில் காணாமல் போன விநாயகர் சிலையை வால்பாறை மார்க்கெட் பகுதியில் போலீசார் மீட்டனர்.

வால்பாறையை அடுத்த குரங்கு முடி எஸ்டேட்டில் உள்ள கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன் விநாயகர் சிலை காணாமல் போனது. இச்சம்பவம் பற்றி கோவில் பூசாரி வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், வால்பாறை மார்க்கெட் பகுதியில் கடை முன் சாக்கு பை கிடந்தது. நீண்ட நேரமாக சாக்கு பை அங்கே கிடக்கவே உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் காவல்துறையினர் சாக்கு பையை கைப்பற்றி சோதனையிட்டதில் குரங்கு முடியில் காணாமல் போன விநாயகர் சிலை இருப்பது தெரியவந்தது.
சிலையை கைப்பற்றிய உதவி ஆய்வாளர் வீரம்மாள், சிலையை அங்கு வைத்துவிட்டு சென்றவர்கள் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.