நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கிருஷ்ணா புதூர் கிராமத்தில் கழிவு நீர் செல்லும் கால்வாயில் விழுந்த பசுமாட்டை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போராடி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

கோத்தகிரி அருகே உள்ள கிருஷ்ணா புதூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியின் அருகே பசு மேய்ச்சலுக்கு விடுபட்டிருந்த நிலையில், அப்பகுதியின் கழிவு நீர் செல்லும் சுமார் 15 அடி ஆழம் கொண்ட கால்வாயினுள் விழுந்து நீண்ட நேரமாக வெளியே வர முடியாமல் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து அறிந்த கிராம மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கால்வாயினுள் விழுந்து வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பசுவை கிராம மக்கள் உதவியுடன் கயிறு மூலம் கால்வாயிலிருந்து பசுவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடிய அவர்கள் பசுவை உயிருடன் மீட்டனர்.