கோவையில் ஸ்டுடியோக்கைகளை குறிவைக்கும் ஹேக்கர்கள்

கோவை : கோவையில் ஸ்டுடியோக்கைகளை குறிவைக்கும் ஹேக்கர்கள், ஆன்லைன் மூலம் பல லட்சம் மோசடி என புகார். ஸ்டுடியோ உரிமையாளர்களை குறிவைத்து வைரஸ்களை பரப்பி பல லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.


கோவை : கோவையில் ஸ்டுடியோக்கைகளை குறிவைக்கும் ஹேக்கர்கள், ஆன்லைன் மூலம் பல லட்சம் மோசடி என புகார். ஸ்டுடியோ உரிமையாளர்களை குறிவைத்து வைரஸ்களை பரப்பி பல லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.



கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் போட்டோஸ், வீடியோஸ் விற்பனை செய்யும் ஸ்டுடியோ நடத்தி வருபவர் முத்துக்குமார். கடந்த 2ஆம் தேதி, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் உட்பட தொழில் சம்மந்தமான புகைப்படங்கள், வீடியோக்கள் எடிட் செய்யும் கணினியில் இருந்த அனைத்து பைல்களும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

மேலும், பழைய முறைக்கு மாற்றித்தர  970 அமெரிக்கா டாலர் தர வேண்டும் என்ற குறிப்புடன் கோடிங்க் முறையில் , இமெயில் முகவரிடன் கூடிய ஒரு பைல் குறிப்பிடப்பட்டிருந்ததன் மூலம் ஹேக்கர்கள் மோசடி என்பதை அவர் உறுதி செய்தார். 

சுமார் 3 டி.பி. அளவிலான பைல்கல்  ஹேக் செய்யப்பட்ட கணினியில் உள்ளதாகவும், சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கும், பொருளாதார பாதிப்புக்கும் ஆளாகி உள்ளதாக கூறி, ஹேக்கிங்கால் பாதிக்கப்பட்ட முத்துக்குமார், கோவை மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையரிடம் மனு அளித்தார். அந்த மனுவை சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்படும் என துணை ஆணையர் தெரிவித்துள்ளார். 

கோவை மட்டுமின்றி கிருஷ்ணகிரி, சேலம், கரூர், சென்னை போன்ற தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சுமார் 150 ஸ்டூடியோக்கள் இதேபோன்ற ஹேக்கிங்கால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பணம் தருவதாக ஒப்புக்கொள்ளும் ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு டாலர் தொகையை குறைத்து விலை குறைவும் செய்யப்படுவதாக கூறும் பாதிக்கப்பட்ட ஸ்டுடியோ உரிமையாளர், அனைவருக்கும் ஒரே விதமான தொகையை நிர்ணயிக்காமல், மாறுபட்ட தொகையை நிர்ணயிப்பதன் மூலம் அந்தந்த ஸ்டுடியோ விற்பனை குறித்து அறியப்பட்டே ஹேக்கிங்க் செய்யப்படுவதாகவும், ஒவ்வொரு ஸ்டுடியோ ஹேக் செய்யப்பட்டதால் கணினியில் உள்ள போட்டோ, வீடியோக்களை பெற முடியாத நிலையால் நிலைக்குலைந்து உள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...