சென்னை : தெலுங்கானா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு இடையே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
வெப்பசலனம் காரணமாக தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு,
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.