கோவையில் திருநங்கை வேடமிட்டு வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

கோவை : கோவையில் திருநங்கை வேடமிட்டு வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை : கோவையில் திருநங்கை வேடமிட்டு வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் விக்னேஷ் குமார்(24). இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இவருடைய கல்வி சான்றிதழ் மாயமானதால் பிரதி(duplicate) சான்றிதழ் வாங்குவதற்காக பீளமேடு பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, திருநங்கைகள் இரண்டு பேர் வந்து முகவரி கேட்பது போல் நடித்து விக்னேஷ் குமாரிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து விக்னேஷ்குமார் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரட்டிப் பிடித்து இருவரையும் பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், திருநங்கை வேடத்தில் இருந்தவர்கள் கவுண்டம்பாளையம் டி.வி.எஸ் நகர் பகுதியில் வசிக்கக்கூடிய ஆனந்தன் என்கிற மணிகண்டன்(36) என்பதும் அதே பகுதியில் வசிக்கக்கூடிய கனி என்கிற மணி(32) என்பதும் தெரியவந்தது..

இதுகுறித்து, பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததுடன் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...