கோவை : கோவை மாநகராட்சி மற்றும் காவல்துறை உரிமை பெறாமல் மசாஜ் சென்டர் நடத்துவது சட்டப்படி குற்றம் என்றும் இனிமேல் மசாஜ் சென்டர் நடத்தக்கூடாது, மீறி நடத்தினால் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி காவல் ஆணையர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
கோவை : கோவை மாநகராட்சி மற்றும் காவல்துறை உரிமை பெறாமல் மசாஜ் சென்டர் நடத்துவது சட்டப்படி குற்றம் என்றும் இனிமேல் மசாஜ் சென்டர் நடத்தக்கூடாது, மீறி நடத்தினால் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி காவல் ஆணையர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
கோவையில் உள்ள முக்கியமான ஓட்டல்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்களில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடந்து வந்து கொண்டிருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுமித் சரண் உத்தரவிட்டார்.
இதன்பேரில் கடந்த ஒரு வாரமாக போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் கோவை மாநகரில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் இருப்பது தெரியவந்தது, மேலும் மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரிய வந்தது. 6 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் கிழக்கு மாநகர பகுதி சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் அலுவலகத்தில் அனைத்து மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடனான கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உதவி காவல் ஆணையர் சோமசுந்தரம் பேசுகையில், மசாஜ் சென்டர் நடத்துவதற்கு யாரும் எந்த உத்தரவாதமும், மாநகராட்சி மற்றும் காவல்துறை உரிமை பெறாமல் மசாஜ் சென்டர் நடத்துவது சட்டப்படி குற்றம் என்றும் இனிமேல் மசாஜ் சென்டர் நடத்தக்கூடாது, மீறி நடத்தினால் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், மசாஜ் சென்டருக்கு இடம் கொடுக்கும் லாட்ஜ் உரிமையாளரும் கட்டட உரிமையாளர்களும் கைது செய்யப்படுவார்கள், ஆகவே அனைத்து மசாஜ் சென்டரையும் உடனடியாக மூட வேண்டும் என்று கூறினார்.