கோவை : போலியான நீதிமன்ற கோப்புகளை உருவாக்கி சமரச தீர்வு மையம் என்று பல லட்சம் ரூபாயை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட போலீ நீதிபதியை கைது செய்துள்ள போலீசார் அவரது வீட்டில் நான்கு மணிநேரமாக சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜெகநாதன். இவருக்கு சொந்தமான நிலம் தர்மபுரி அருகே அதியமான் கோட்டை பகுதியில் இருந்துள்ளது. இதில் குறிப்பிட்ட அளவு உள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து சிலர் வேறொரு நபருக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஜெகநாதன் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நாகராஜ் என்பவரை கைது செய்தனர். நாகராஜ் இந்த போலி ஆவணங்களை தயாரிக்க உடந்தையாக இருந்ததாகவும் போலியான நீதிமன்ற கோப்புகளை உருவாக்கி சமரச தீர்ப்பாயத்தை ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த இரண்டு வழக்கறிஞர்கள் கைது செய்யபட்ட நிலையில் இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியான மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்திரன் என்ற போலி நீதிபதி கைது செய்யபட்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியை சேர்ந்த அங்கமுத்து என்பவர் மகன் சந்திரன் (54) போலி நீதிபதியாக செயல்பட்டு இதுபோன்று சமரச தீர்ப்பாயத்தை நடத்தி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததுள்ளது. இவரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின்பேரில் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யபட்டுள்ளார்.
மேலும் அவரது பாதுகாவலராக நடித்த கூட்டாளியான குமார் ஆகியோர் கரூர் மாவட்டத்தில் உள்ள சுங்கச் சாவடியை கடந்து போகும்போது கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையம் மணி நகரில் உள்ள சந்திரன் வீட்டிற்கு வந்த தர்மரி போலீசார் சந்திரனை கைது செய்ததுடன் வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மோசடியில் ஈடுபட்டதற்கான முக்கியமான ஆவணங்கள் மற்றும் நிலமோசடி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என ஏராளமான ஆவனங்களை பெட்டிகள் மற்றும் சூட்கேசுகளில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலி நீதிபதியான சந்திரன் அந்தப் பகுதியில் கடந்த ஏழு வருடமாகவே மிடுக்கான தோற்றத்தில் சுற்றிக்கொண்டிருந்த நிலையில் இன்று அவரை போலீசார் கைது செய்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் விசாரனைக்கு பிறகே இன்னும் யார் யாரிடம் இதுபோன்ற மோசடிகள் அரங்கேறி உள்ளது என தெரியவரும்.