நீலகிரி : சர்வதேச அளவில் புகழ்பெற்ற உதகை மலை ரயில் நிலையத்தில், நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தவரின் வாழ்க்கை முறை வரையப்பட்டுள்ள ஓவியங்கள் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவர். மேலும், மலை ரயில் பாதையில் சுரங்கப் பாதைகள், பள்ளத்தாக்கு காட்சிகள் மற்றும் தேயிலை தோட்டக்காட்சிகள் என பல்வேறு இயற்கை காட்சிகளை ரசித்து செல்ல இந்த மலை ரயிலில் பயணம் செய்வர்.

இந்நிலையில், சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்கும் உதகை ரயில் நிலையத்தில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பழங்குடி இனத்தவர்களான தோடர் இனத்தவர்களின் வாழ்க்கை முறைகளை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இதில் தோடர்களின் பழங்கால வீடுகள் மற்றும் விவசாயம் சார்ந்தவற்றை ஓவியங்களாக வரைந்துள்ளதை உள்ளூர் மக்கள் மட்டுமன்றி மலைரயில் நிலையத்திற்கு வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

பாரம்பரிய மிக்க மலை ரயில் நிலையத்தில் மலை மாவட்டத்தின் பெருமையை போற்றும் பாரம்பரிய ஓவியங்களையும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்வது கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது.