கோவை : கோவை மாநகராட்சியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், டெங்கு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும், நோயைத் தடுப்பதற்கும் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் விவாதித்தார்.

அப்போது, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கள மட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அவர், சுகாதாரத் தொழிலாளர்கள் வீட்டுக்கு வீடு வீடாக ஆய்வு செய்து ABATE மருந்துகளை தெளிக்குமாறு கூறினார்.
நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் மாநகராட்சி தொழிலாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் டெங்கு நோயைத் தடுப்பதற்காகவும், நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கோவை மாநகராட்சி நகரம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், ஏடிஎஸ் கொசுக்களை அழிப்பது, டெங்குகாய்ச்சல் பரவாமல் தடுப்பது போன்ற விழிப்புணர்வு அறிக்கைகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி, நகர சுகாதார அதிகாரி சந்தோஷ் குமார், மண்டல சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.