கோவை : கோவையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 16 வயது முதலாம் ஆண்டு கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
கோவை : கோவையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 16 வயது முதலாம் ஆண்டு கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
கோவை மாவட்டம் ரத்தினபுரி, சுப்பாத்தாள் லே-அவுட்டில் வசிக்கும் பாலசுப்பிரமணி மற்றும் சுப்ரியா, அவர்களின் மகன் ராம்குமார் (18). இவர் கடந்த 8ம் தேதி மாலை 4.30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது கணபதி மோர் மார்க்கெட் அருகில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவினாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 10ம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது தந்தை பாலசுப்பிரமணி மற்றும் சுப்ரியா, அவர்கள் ராம்குமார் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டது.
கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சிஹெச். மருத்துவமனைக்கும், கண்கள், தோல், எலும்பு மற்றும் ஒரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்குத் தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்
இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி அவர்கள் பேசுகையில்;-
மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும் என்றார். மேலும், உடல் உறுப்பு தானம் வழங்கிய ராம்குமார் குடும்பத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.