கோவை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கின்றதா என்பதை கண்டறிந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகனிடம் புரட்சிகர இளைஞர் கழகத்தினர் இன்று மனு அளித்தனர்.

பின்னர் அந்த அமைப்பின் கோவை மாவட்ட செயலாளர் வேல்முருகன்,தலைவர் பெரோஸ் பாபு ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தனர்.
அப்போது, அவர்கள் பேசுகையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கின்றதா என்பதை கண்டறிந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தூய தமிழில் பேசாதவர்களை அடிப்பேன் எனவும், நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருப்பார்கள் எனவும், நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்திய 18 லட்சம் பேரை தவிர மற்றவர்கள் தமிழர்கள் அல்ல எனவும் வந்தேறி தெலுங்கு வடுகன் என்றும் பிரிவினைகள் தூண்டும் விதத்தில் சீமான் பேசி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி அடிப்பதும், தூய தமிழில் பேசவில்லை என்றால் முதுகுதோலை உரிப்பேன் என்று சொல்வதும் பாசிச சிந்தனைகளே என கூறிய அவர்கள், எச்.ராஜாவின் மனநிலையை நீதிமன்றம் சோதிக்க சொல்லியதை போல, சீமானின் மனநிலையையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.