காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டம் ; குமரகுரு கல்வி நிறுவனத்தில் அஹிம்சா வனம் துவக்கவிழா

கோவை : மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாளினை முன்னிட்டு குமரகுரு சுற்றுச்சூழலியல் மன்றம் பல்லூயிர் சூழலை மேம்படுத்தும் விதமாக அஹிம்சா வனம் எனும் சூழலியல் அமைவிடத்திற்கான துவக்கவிழா நடைபெற்றது.

கோவை : மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாளினை முன்னிட்டு குமரகுரு சுற்றுச்சூழலியல் மன்றம் பல்லூயிர் சூழலை மேம்படுத்தும் விதமாக அஹிம்சா வனம் எனும் சூழலியல் அமைவிடத்திற்கான துவக்கவிழா நடைபெற்றது.

சூழலியல் மற்றும் காந்தியக் கொள்கைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் அதை பரப்பவும், நகர்ப்புற சூழல் மேம்பாட்டிற்காகவும் ஒரு எக்கர் பரப்பளவில் இந்த அஹிம்சா வனம் அமைக்கப்படுகின்றது. அந்நிகழ்விற்கான துவக்கவிழா நேற்று மாலை நடைப்பெற்றது.

பல்லுயிர்களுக்கான நிலையான, ஆரோக்கியமான சூழலமைவிற்காக உணர்வு மற்றும் தொடர்ச்செயல்பாட்டுக் காளமாக குமரகுரு சூழலியல் மன்றம் திகழ்கின்றது. இம்மன்றத்தின் சிறந்த சுற்றுச்சூழல் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நீண்டநாள் திட்டமாக அஹிம்சா வனம் திகழ்கின்றது.

கே.சி.டியின் 40வது ஆண்டுவிழாவான 2024ம் ஆண்டிற்குள் கே.சி.டியின் வளாகத்தில் நிலையான சுற்றுச்சூழல் அமைப்பினை ஏற்படுத்துதல், அதன்வழி சிறந்த பல்லுயிர் பன்மீயத்திற்கான தொடர்செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை இத்திட்டம் அடிப்படை நோக்கமாகக் கொண்டமைகின்றது.

இந்த அஹிம்சா வனம் 150 வகையான தாவரங்கள், பல்வகையான மரங்கள், புதர்கள், கொடிகள், அரிய மூலிகைகள் போன்றவற்றை உள்ளடக்கிய, குறிப்பிட்டளவிலான கோழி மற்றும் சிறு விலங்கினங்களை வளர்க்கும் பசுமையான புகலிடமாகும். மேலும் இது பார்வையாளர்களுக்கும் இயற்கையோடான நல்ல தொடர்பினை ஏற்படுத்தி அவர்களது நல்வாழ்விற்கு வழிகோலுகிறது.

பன்அடுக்கு முறையிலமைந்த தோட்டங்கள், வளைந்த பாதைகள், வளைந்த கல்பாலம், விளக்கம்பெறும் அறைகள், அமைதியை தரும் இடங்கள் போன்றவற்றுடன் அமைதியான அனுபவத்தினை தரவல்லதாக இவ்விடம் அமைந்துள்ளது. குமரகுரு வளாக்தின் நுரையிரல் போன்று விளங்கவிருக்கும் இவ்வனம் 3 ஆண்டுகளில் சுமார் 10,000 கிலோ கார்பனை கட்டுப்படுத்தவுள்ளது.

ஏற்கனவே குமரகுரு வளாகத்தில் இருக்கும் 80 மேற்பட்ட மர இனங்கள், 4500 மேற்பட்ட மரங்கள் மற்றும் அரிய மூலிகைகள் போன்றவற்றை வரும் 5 ஆண்டுகளில் 500 மேற்பட்ட இனங்களாக மாற்றுவதற்கும், 65 மேற்பட்ட பறவைகள், 55 மேற்பட்ட பல்வேறு வகையான பட்டாம் பூச்சிகள் மற்றும் ஊர்வன போன்றவற்றிற்கான புகலிடமாகவுள்ள நிலையினை மேம்படுத்துவதற்கும் இந்த அஹிம்சா வனம் பெரும்துணைபுரியும்.

உலக அமைதி மற்றும் வளத்திற்காக ஜப்பானிய குழுவினரின் சிறப்பு பிரார்த்தனையொன்றும் இந்நிகழ்வில் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து சிவாஞ்சலி நுண்கலைக் குழுவினரின் சூழலியல் சார்ந்த நடனங்களும், கே.சி.டி கல்லூரியின் இவோக் குழுவினரின் நடனமும் நடைப்பெற்றன. பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த பேராளர்கள் கலந்துக்கொண்ட இந்நிகழ்வு நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...