கோவை : மேட்டுப்பாளையத்தில் பருவமழையொட்டி 60,000 விதை பந்துகள் பொதுமக்கள், மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கீரின் ஆப்பிள் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டன.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையானது தொடர்ந்து இன்னும் பெய்து வருகிறது. குறிப்பாக மலையடிவார பகுதிகளாக இருக்கூடிய மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. எனவே இந்த பருவமழையை பயன்படுத்தி மரங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கீரின் ஆப்பிள் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

பருவமழைக்கு ஏற்றவாறு நாட்டு மர வகைகளான வேம்பு, வாகை, சொர்க்கமாம், மலைவேம்பு உள்ளிட்ட மரங்களின் விதைகளை விதைப்பந்துகளாக உருவாக்கி பாக்கெட்டுகளில் அடைத்து சுமார் 60,000 விதைப்பந்துகள் மக்கள் அதிகமாக கூடும் இடமான பேருந்து நிலையம் முன்பு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் விதைப்பந்துகளை வாங்கி சென்றனர். மேலும், மேட்டுப்பாளையத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் வளாகத்தில் நட இலவசமாக விதைப்பந்துகள் லழங்கபட்டன.