கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நோ பார்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கு மாவட்ட ஆட்சியர், பூட்டு போட போக்குவரத்து காவலர்களுக்கு உத்தரவிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.அரசு அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இக்கூட்டத்திற்கு நான்கு சக்கர வாகனத்தில் வரும் அதிகாரிகள் அலுவலக வாயில் முன்பும் அதற்கு பின்னால் உள்ள இடத்தில் நிறுத்துவார்கள்.
இரு சக்கர வாகனத்தில் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டு இருந்தும் இங்கு வருபவர்கள் ஆங்காங்கே கண்ட இடத்தில் வண்டியை நிறுத்தி சென்று விடுகின்றனர். இன்று அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்த நிலையில் அலுவலகத்திற்கு ஆட்சியர் வந்த போது இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதை கண்ட அவர், அந்த வாகனங்களுக்கு பூட்டு போட போக்குவரத்து காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவலர்கள், இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு செயின் கொண்டு பூட்டு போட்டதுடன் அபராதமும் விதித்தனர். அந்த வாகனங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களின் வாகனம் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் அபராதம் விதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளதால், அவரை சந்தித்த பிறகே வாகனங்களில் போடப்பட்ட பூட்டு அகற்றப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து ஆட்சியரை சந்தித்து தங்களது தவறுக்கு வருத்தம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.