நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த கீழ் நாடுகாணி பகுதியில் பெண் தொழிலாளர்களை தனியார் தோட்டத்துக்கு வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட போது, வேன் - லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்து கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கூடலூரை அடுத்த நாடுகாணி, பொன்னூர், கீழ்நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கீழ் நாடுகாணியை ஒட்டியுள்ள நாடுகாணி பிளான்டேசன் தனியார் தேயிலைத் தோட்டம் ஒன்றிற்கு 50க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். இவர்களை வேலைக்கு அழைத்துச் செல்ல தோட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேன் ஒன்றில் தினசரி வேலைக்கு சென்று திரும்புகின்றனர்.
இந்த நிலையில், வழக்கம் போல நேற்று காலை தொழிலாளர்கள் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, கீழ் நாடு காணி பகுதி தனியார் எஸ்டேட் அருகே வந்த போது, எதிரே கேரளாவில் இருந்து வந்த டிப்பர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் முன்பக்க இருக்கையில் அமர்ந்து சென்ற தொழிலாளி ஜானகி (55) என்பவர் முன்புற கண்ணாடியை உடைத்துக் கொண்டு சாலையில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்து உள்ளார். இவரை கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
இதேபோல், ஜெயக்கொடி (43) என்ற பெண்ணும் பலத்த காயமடைந்து உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். கால்கள், தலை, முகம் ஆகியவற்றில் காயமடைந்த 25 பேர் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டாவது கட்டமாக பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் அதிவேகமாக சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து லாரியில் மோதி மோதி விபத்துக்குள்ளானதாக வேனில் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.