நீலகிரியில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த 7 சொகுசு விடுதிகளுக்கு சீல்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகள் உள்ளன. இந்த காட்டேஜ்கள் அரசிடம் எந்தவித அனுமதி பெறாமல் குடியிருப்புகளுக்காக அனுமதி பெற்றுக்கொண்டு பின்பு அதை சொகுசு விடுதிகளாக மாற்றியுள்ளனர். மேலும் பல்வேறு புகார்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்றதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகள் உள்ளன. இந்த காட்டேஜ்கள் அரசிடம் எந்தவித அனுமதி பெறாமல் குடியிருப்புகளுக்காக அனுமதி பெற்றுக்கொண்டு பின்பு அதை சொகுசு விடுதிகளாக மாற்றியுள்ளனர். மேலும் பல்வேறு புகார்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்றதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளனர்.



மேலும், ஒரு சிலர் வீடுகளில் வியாபாரம் செய்வதால் அந்த வீடுகளுக்கும் சீல் வைக்கும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளனர். இன்று மாலை 6 மணி வரை 7 காடேஜ்களுக்கு சீல் வைக்கப்பட்டது. பெரும்பாலும் இந்த காட்டேஜ்கள் காட்டுப் பகுதிகளை ஒட்டி உள்ளன. இதனால் வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் வருவதால் அதிக அளவில் பொதுமக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் காட்டுப் பகுதியில் ஒட்டியுள்ள சொகுசு விடுதிகளுக்கு உடனடியாக சீல் வைக்கும் பணியில் தொய்வின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...