கோவை : மேட்டுப்பாளையம் காரமடை அரங்கநாதர் கோவில் குடமுழுக்கு விழாவில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரினை தொடர்ந்து அறநிலையத்துறை தணிக்கை குழு இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமையான வைணவ திருத்தலமாகும். கொங்கு மண்டலத்தின் பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதில் அரசு நிதி மற்றும் பொதுமக்களிடம் அன்பளிப்பு பெற்று கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பல கோடி ரூபாய் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது. இதற்கு முறையான ரசீதுகள் வழங்கப்படாமல் முறைகேடுகள் செய்ததாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து காரமடையை சேர்ந்த நன்கொடை அளித்த சில முக்கிய பிரமுகர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த புகாரின் மீது இன்று கோப்புகளை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து அறநிலையத்துறை தனிக்கை குழு அதிகாரிகள் காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு வந்தனர். தமிழக இந்து அறநிலையத்துறை தனிக்கை குழு அலுவலர் லட்சுமி தலைமையிலான சென்னை அதிகாரிகள் கோவை அறநிலைய அதிகாரிகள் இனைந்து கும்பாபிசேகம் நடைபெற்ற போது நன்கொடை வசூல் செய்த கோப்புகளையும் வரவு செலவு கணக்குகளையும் ஆய்வு செய்தனர். இதில் சில முக்கிய பக்கங்கள் தனிக்கை குழு கைப்பற்றியாக கூறப்படுகிறது.
இந்த கோப்புகளை ஆய்வு செய்ய, கடந்த 2015ம் ஆண்டு ஆலயத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடைபெற்றது. ஆய்வு பணிகள் முடித்த தணிக்கை குழு அது குறித்த அறிக்கையை இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தனர்.