கோவை : கோவை மாநகராட்சியில் 1535 கடைகளில் சோதனையின் போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1,322 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 1,79,400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்களின் உத்தரவின்படி, பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 08.10.2019 மற்றும் 09.10.2019 ஆகிய தேதிகளில் மாநகராட்சி அலுவலர்கள் கடைகளில் திடீர் சோதனைகள் மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தில் 205 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, தடைசெய்யப்பட்ட 121.5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.19,600/- மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டது. தெற்கு மண்டலத்தில் 289 கடைகளில் 142.5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.26,800/- மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
கிழக்கு மண்டலத்தில் 509 கடைகளில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.18,500/- மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டது. மேற்கு மண்டலத்தில் 357 கடைகளில் 384 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.74,700/- மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், மத்திய மண்டலத்தில் 175 கடைகளில் 634 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.39,800/- மதிப்பில் அபராதமும், ஆகமொத்தம் அனைத்து மண்டலங்களிலும் 1,535 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1,322 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1 இலட்சத்து 79 ஆயிரத்து 400 மதிப்பில் அபராதம் விதித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்கள் தெரிவித்துள்ளார்.