மின் ஒப்பந்த பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு அமைப்பினர் மறியல் போராட்டம் ; 315 பேர் கைது

கோவை : மின் ஒப்பந்த பணியாளர்களின் பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினர் 315 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை : மின் ஒப்பந்த பணியாளர்களின் பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினர் 315 பேரை போலீசார் கைது செய்தனர்.



மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களின் பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு அமைப்பினர் மாநிலம் முழுவதும் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக கோவையில் மண்டல பொறியாளர் அலுவலக நுழைவாயில் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



மண்டல செயலாளர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் மின்வாரியம் அறிவித்த தினக்கூலி 380 வழங்க வேண்டும், 5,000 கேங்க்மேன் என்ற கள உதவியாளர்கள் என மாற்றி 10,000 ஆக உயர்த்த வேண்டும், தானே, வர்தா, கஜா புயல்களின் போது மின்துறை அமைச்சர் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வயது வரம்பை ஒப்பந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டமானது நடைபெற்றது.



இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநில அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 315 பேரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...